கொரோனா பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா-பங்களாதேஷ் இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.
டாக்கா-கொல்கத்தா இடையேயான பேருந்தை பங்களாதேஷீக்கான இந்திய துாதர் டாக்காவில் இன்று காலை தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பந்தன் மற்றும் மைத்ரி ரயில் சேவைகள் மே மாதம் 29 ஆம் தேதி தொடங்கப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்து போக்குவரத்தும் தொடங்கியுள்ளது.