Rummy Online: தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்தையும் மக்களுக்காக கொடுத்திருக்கிறது என்று பார்த்தால், அதன் கூடவே நுட்பமாக பல பயங்கர விளையவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களையும் செய்துவிட்டுச் சென்றுள்ளது. அதில் ஒன்று தான் அபாயகரமான ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகள்.
சூதாட்டம் என்பது சுகமானதாக சிலர் உணரலாம். சுவைத்து மகிழும் நேரத்தில், மொத்தையும் சுருட்டி மக்களை முடக்கும் தன்மை இந்த சூதாட்டங்களுக்கு உண்டு. தற்போது, இது ஆன்லைனிலும், ஆப்கள் வழியாகவும் ஆர்பரித்து காணப்படுவது எச்சரிக்கை சமிக்ஞை ஆகவே பார்க்கப்படுகிறது.
சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல்.திருவள்ளுவர்
சூதாடுவதால் ஒருவன் முன்னோர் வழியாக பெற்ற அனைத்து பரம்பரைச் செல்வத்தையும் இழந்துவிடுவான். செல்வத்தை மட்டுமல்ல, நல்ல பண்பையெல்லாம் கூடச் சூது கெடுத்து விடும் என சூதின் நச்சு தன்மையை எடுத்துரைக்கிறது.
Google Search: கூகுளில் இவற்றை ஒருபோதும் தேடாதீர்கள்!
சூது ஐந்து விஷயங்களை மனிதனிடமிருந்து எடுத்துவிடும். அந்த ஐந்து என்னென்ன தெரியுமா? உடுக்கும் உடை, செல்வம், உண்ணும் உணவு, புகழ், அவன் பெற்ற அறிவு என கி.மு 500 காலகட்டங்களிலேயே திருவள்ளுவர் பாடிச் சென்றுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் என்றால் என்ன?
தொழில்நுட்ப ரீதியாக, ஆன்லைன் சூதாட்டம் என்பது இணையத்தில் சில சேவையகங்களால் சூதாட வழங்கப்படும் தளங்களாகும். இதை செயலி அல்லது இணையம் வாயிலாகவும் அணுக முடியும்.
Indian Railways: இனி ரயிலில் நிம்மதியாகத் தூங்கலாம் – இந்தியன் ரயில்வே உங்களை எழுப்பி விடும்..!
அங்கு மக்கள் பந்தயம் மூலம் எந்த தொகையிலும் பணம் சம்பாதிக்க முடியும். சிலர் லட்சக் கணக்கில் பெரும் தொகையை சம்பாதிக்கிறார்கள். இது தளத்தை விரும்பத்தக்கதாக மாற்றுகிறது. ஆனால், மற்றொரு புறம் அதிகளவில் மக்கள் பணத்தை இழக்கின்றனர். இதனால் ஏற்படும் கடன் சுமையால் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.
ஆன்லைன் சூதாட்டம் ஏன் பரவலாக உள்ளது?
சூதாட்டம் பொதுவாக அதிக வேலை செய்யாமல் நிறைய பணம் சம்பாதிக்க விரும்பும் நபர்களால் விரும்பப்படுகிறது. மறுபுறம் இதுகுறித்து நன்கு அறிந்தவர்கள் ஆன்லைன் சூதாட்டங்களில் நுழைகின்றனர்.
பெரு நிறுவனங்கள் பலதும், பிரபலங்கள் பலரும் சூதாட்ட நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பது கொடுமை. கிரிக்கெட் சூதாட்டம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதில் அதிகளவில் பணம் இழப்பதில்லை.
Useful Apps: இந்தியர்கள் இந்த 5 செயலிகளை வைத்திருப்பது அவசியம்!
ஆனால், ஆன்லைன் ரம்மி அப்படி மக்களை எளிதாக விடுவதில்லை. லட்சக்கணக்கிலான பண இழப்பை சாமானிய மக்களுக்கு ஏற்படுத்துகிறது. ஆன்லைன் ரம்மியால் கொலை, கொள்ளை, தற்கொலை அதிகமாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுவதை உங்களால் நம்ப முடிகிறதா!
தமிழ்நாடு அரசு உத்தரவு
உண்மை தான். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மியால் பெரும் சிக்கல்கள் நிலவி வருகிறது. ஜூன் 6 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.3 லட்சம், 21 கிராம் தங்கத்தை பறிகொடுத்த பெண் தற்கொலை செய்து கொண்டது தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு அபாய மணியை எழுப்பியது.
இதனை தடுக்க தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் ஒரு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் – ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆன்லைன் தளங்கள் மக்கள் அதில் பங்கேற்பதை எளிதாக்கியுள்ளன. இந்தத் துறையில் போட்டி மற்றும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் பல்வேறு குழுக்களுக்கான அணுகலை சில பயன்பாடுகள் வழங்குகின்றன.
கர்நாடக தடைக்கு விதிக்கப்பட்ட தடை
பிப்ரவரி 14, 2022 அன்று, ஆன்லைன் கேமிங்கை தடைசெய்து, அதை கிரிமினல் குற்றமாக மாற்றிய கர்நாடக அரசின் திருத்தச் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இணையம் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கர்நாடகா உயர்நீதிமன்றத்தை அணுகி ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்டத்தை தடை செய்வதற்கு எதிராக சில காரணங்களை முன்வைத்தது. அதில்,
தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்கள் நிறுவனங்களின் பெரும் இழப்புஆன்லைன் கேமிங்கில் இருந்து பெறப்படும் வரி நிறுத்தப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.அடிப்படை உரிமைகள் பிரிவு 19ன் படி, இந்திய குடிமக்களுக்கு தொழில், தொழில், வர்த்தகம் மற்றும் வணிக சுதந்திரத்திற்கான உரிமை உள்ளது.
Nothing Phone 1: போன்களின் புதிய நாயகன் நத்திங் போன் 1 அவதாரம் ஜூலை 12 முதல்…!
எனவே, ஆன்லைன் கேமிங் தொழிலில் ஈடுபடும் தனிநபர் அல்லது ஆன்லைன் கேமிங் தளங்களை வைத்திருக்கும் வணிகர்கள் தங்கள் தொழிலை சுதந்திரமாக தொடரும் உரிமைக்கு கர்நாடக அரசின் காவல்துறை திருத்தச் சட்டம் எதிரானது என்று நீதிமன்றம் கூறியது.
மக்கள் அதிக எண்ணிக்கையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விழுவதற்கு காரணங்கள்
இது பணம் சம்பாதிக்க எளிதான வழியாகத் தோற்றமளிக்கிறது.வேலையின்மை பணத்திற்கான தேவைக்கு வழிவகுக்கிறது.கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற இது ஒரு சிறந்த ஆதாரமாகும்.எளிதாக அணுக முடிகிறதுபொது உடமையான இணைய உலகம்உலகளவில் பேபால் போன்ற பேமென்ட் கேட்வே வழியாக அணுகலாம்இது வரை எந்த இந்திய குடிமகனும் கைது செய்யப்படாதது
லாட்டரி
முன்னதாக, இந்தியாவில் லாட்டரி சட்டவிரோதமானது. ஆனால் பின்னர் அரசாங்கம் அதன் மீதான தடையை நீக்கியது. லாட்டரி சட்டம் 1998 படி, லாட்டரியை சட்டப்பூர்வமாக்க வேண்டுமா இல்லையா என்பது மாநிலங்கள் தீர்மானிக்கலாம்.
இன்று 29 மாநிலங்களில் லாட்டரி சட்டப்பூர்வமானது. அவை அசாம், அருணாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, கோவா, நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, மணிப்பூர், மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலம், சிக்கிம் மற்றும் பஞ்சாப் ஆகும்.
லாட்டரி வெற்றியின் மீது அரசாங்கம் 30 விழுக்காடு வரியைப் பெறுகிறது. தமிழ்நாட்டில் இது தடைசெய்யப்பட்டதாகும். மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை தொடர்ந்து வருகிறது.
Clean Coast: மெரினாவில் குளிக்கும் முன் இந்த செயலியை பார்த்துவிட்டு செல்லவும்!
ஆன்லைன் சூதாட்டத்தில் மோசடி
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாக பணம் மாறியிருக்கிறது. இந்தத் தேவை சில சமயங்களில் மக்களை இத்தகைய கொடூரமான பொறிகளுக்கு இழுத்துச் செல்கிறது. அது சில நேரங்களில் அவர்களின் வாழ்க்கையையே அழிக்கிறது.
இந்தியாவில் பல மோசடிக் குழுக்கள் உள்ளன. அவர்கள் தங்களிடம் ஒரு பெரிய தொகை இருப்பதாக மக்களை ஏமாற்றி, பின்னர் அவர்களின் கணக்கு விவரங்களைக் கேட்டு அவர்களின் மொத்த பணத்தையும் சுரண்டி விடுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
பணத்தின் மீதான பேராசை நம்மை எந்த வலையிலும் சிக்க வைக்கும். எனவே, நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் முடிவுகளை அற்ப செயலிகளுக்கு அளிக்காதீர்கள்.