கடலூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரை திமுக-வினர் கிழித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் அக்கட்சியினர் தமிழக அரசை விமர்சித்து பேசியதாகவும், அதனால் ஆத்திரம் அடைந்த திமுக-வினர் மேடையில் ஏறி பேனரை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
அங்கிருந்த போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.