Tamil Serial Actress Photo Gallery : விஜய் டிவியின் முக்கிய பொழுதுபோக்கு சீரியல் பாக்யலட்சுமி. குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினைகள் திருமணத்திற்கு மீறிய உறவு உள்ளிட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் நடக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் இந்த சீரியலில், பெண் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனம் ஈர்த்துள்ளனர். அதிலும் குறிப்பாக தனது சுய மரியாதைக்காக போராடும் பாக்யா கேரக்டருக்கு ரசிகர்கள் இருந்தாலும், கணவரிடம் இந்த கேரக்டர் நடந்துகொள்ளும் விதம் சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஆனாலும் இதில் பாக்யா கேரக்டரின் தோழியாக வரும் ராதிகா, மருமகளாக வரும் ஜெனி, மகனின் தோழியாக வரும் அமிர்தா ஆகிய கேரக்டரில் நடித்துள்ள நடிகைகள் கவனம் ஈர்த்து வருகின்றனர். இவர்கள் 3 பேருமே சீரியலில் சேலை அணிந்து நடித்துள்ளனர்.
ஆனால் சமூகவலைதளங்கள் என்று வரும்போது பல மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், இவர்கள் மூவரும் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்.
திவ்யா கனேஷ் – ஜெனி
ரித்திகா தமிழ் – அமிர்தா
ரேஷ்மா – ராதிகா
சீரியலில் இவர்கள் சேலையில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் மார்டன் உடையில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இதை பார்க்கும் ரசிகர்கள் சீரியலில் பார்த்தை விட ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர்.