புதுமணத் தம்பதியான நயன்தாரா-விக்னேஷ் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் கடவுள் தரிசனம் செய்தனர்.
நேற்றைய தினம் சென்னையில் நடிகை நயன்தாரா-விக்னேஷ்சிவன் கோலாகலமாக நடந்து முடிந்தது.
மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் நட்சத்திர தம்பதியின் திருமணத்தில், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தான் இவர்களின் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு மற்றும் 150 பேருக்கு மேல் அனுமதி இல்லை போன்ற காரணங்களால் அங்கு திருமணம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர தம்பதி திருப்பதிக்கு சென்றனர். அங்கு குடும்பத்துடன் அவர்கள் கடவுள் தரிசனம் செய்தனர்.
அதற்கு முன்பு, நண்பகல் 12 மணிக்கு நாள்தோறும் நடைபெறும் திருமண உற்சவ சேவையில் கலந்துகொண்டு கடவுள் தரிசனம் செய்தனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.