மகாராஷ்டிராவில் கழுகை காப்பாற்ற சென்று விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
மும்பையில் உள்ள பாந்த்ரா- வொர்லி கடற்பாலத்தில் சென்று கொண்டிருந்த காருக்கு அடியில் கழுகு திடீரென சிக்கிக் கொண்டது. அப்போது, காரில் இருந்து இறங்கி கழுகை காப்பாற்ற முயற்சித்த இருவர் மீதும் அவ்வழியாக வேகமாக வந்த டாக்சி மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய டாக்சி ஓட்டுனரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.