சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கொளத்தூர் அருகே உள்ள சேத்துக்குழியைச் சேர்ந்த முருகேசனின் மகள் காமாச்சி மற்றும் அவரது தம்பி மகள் பவித்ரா, பள்ளி விடுமுறை காரணமாக சேத்துக்குளியிலுள்ள பாட்டி பாப்பாத்தி வீட்டிற்கு வந்த நிலையில் 3 பேரும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது, சிறுமிகள் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியதில், மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளை சடலங்களாக மீட்ட நிலையில் இதுதொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.