திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய விவகாரம் 2 ஆண்டுகளுக்கு பின்பு கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சொப்னா நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளாவில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று சொப்னா கூறியது: ‘ஷாஜ் கிரண் மற்றும் இப்ராஹிம் ஆகியோர் என்னை சந்தித்தனர். நீதிமன்றத்தில் கூறியுள்ள தகவலால் ஒன்றாம் நம்பர் விஐபி கடும் கோபத்தில் இருப்பதாகவும், உடனடியாக வாக்குமூலத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஷாஜ் கிரண் என்னை மிரட்டினார். அந்த ஒன்றாம் நம்பர் விஐபி யார் என்பது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.இந்நிலையில் இன்று காலை சொப்னா அளித்த பேட்டியில், ஷாஜ் கிரண் மிரட்டல் ஆடியோவை இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுவேன் என்றும் அப்போது மேலும் பல முக்கிய விவரங்களை தெரிவிப்பேன் என்றும் கூறினார்.