பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவத் தளபதியுமான பர்வேஸ் முஷரஃப் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 78. பாகிஸ்தானின் Waqt news வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜூன் 10ஆம் தேதி அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் வசித்து வந்த பர்வேஸ் முஷரஃப்பின் உடல்நிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோசமடைந்தது. இதையடுத்து, துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனிடையே, பர்வேஸ் முஷரஃப் உயிரிழந்து விட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தன, இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃப் காலமானதாக Waqt news செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம், அந்நாட்டில் இருந்து வெளியாகும் வேறு சில ஊடகங்கள் இந்த தகவலை மறுத்துள்ளன. அத்துடன், வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் பர்வேஸ் முஷரஃப் தரப்பில் இருந்து இதுவரை வெளியாகவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி!
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு 1947ஆம் ஆண்டு குடிபெயர்ந்தது பர்வேஸ் முஷரஃப் குடும்பம். ராணுவத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய அவர், 1998ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் ஆட்சியின் போது ராணுவ தளபதியானார்.
Waqt news
ஆனால், பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே நவாஸ் ஷெரீஃப் ஆட்சியைக் கவிழ்த்து, நாட்டின் தலைமை பொறுப்பை கைப்பற்றினார். 1999 முதல் 2008ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானின் தலைமைப் பொறுப்பை வகித்தார். இதையடுத்து, பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய பர்வேஸ் முஷரஃப், 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வந்தார்.