தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில், ஆண் நண்பரை ஏவி கணவரை கொலை செய்த மனைவி மற்றும் ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். செவ்வாய்கிழமை இரவு வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த கருப்பசாமி கழுதறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது மனைவி கனகலட்சுமியின் செல்போனுக்கு குறிப்பிட்ட ஒரு நம்பரில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்துள்ளதை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.
கணவருடன் பிரச்சணை ஏற்பட்ட போது ரவிச்சந்திரன் என்ற உறவினருடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும், 3 மாதங்கள் வெளியூரில் லாரி ஓட்டி விட்டு கருப்பசாமி வீட்டிற்கு வந்த போது ரவிச்சந்திரனுக்கு தகவல் அளித்ததாகவும், அவர் கத்தியால் கருப்பசாமியை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் கனகலட்சுமி ஒப்புக்கொண்டுள்ளார்.