தங்கத்தின் மீது தீராத காதல் கொண்ட இந்தியர்கள், குழந்தைக்கு பிறப்பு முதல், கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை வரை தங்கத்தினை விருப்பமான உலோகமாக பயன்படுத்துகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா தொடங்கி, வயதானவர்கள் இறப்பு வரை, சீர் வரிசையில் இடம் பெறும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
அப்படிப்பட்ட தங்கத்திற்கு தள்ளுபடி கிடைத்தால் அது நல்ல விஷயம் தானே. வாருங்கள் பார்க்கலாம்.
சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகள் சரிவு என்ன காரணம்..!
தள்ளுபடி அதிகரிப்பு
தங்கத்திற்கான தள்ளுபடியானது 2 மாதத்தில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. அதிலும் வரவிருக்கும் திருமண பருவம் மற்றும் விழாக்கால பருவம் வரவுள்ளது. இதன் காரணமாக தங்கத்திற்கான தேவையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு தள்ளுபடி?
இந்தியாவில் டீலர்கள் தங்கத்திற்கான தள்ளுபடியாக அவுன்ஸூக்கு 10 டாலர்கள் வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இது கடந்த வாரத்தில் அவுன்ஸூக்கு 8 டாலர்கள் மட்டுமே தள்ளுபடிவழங்கப்பட்டது. எனினும் இந்தியாவினை பொறூத்தவரையில் தங்கம் விலையுடன் இறக்குமதி வரி 10.75% மற்றும் 3% ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டியிருக்கும்.
அதிகம் யார் வாங்குகிறார்கள்?
இந்தியாவினை பொறுத்த வரையில் திருமண விழாக்களுக்காக அதிகளவில் தங்க நகைகள் வாங்கப்படுகின்றன. ஆக வரவிருக்கும் திருமண பருவத்தில் தேவையினை ஊக்குவிக்கும் பொருட்டு, தங்கத்திற்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய விலை நிலவரம்
இந்திய சந்தையில் 10 கிராம் தங்கம் 50,805 ரூபாய் என்ற லெவலிலும், வெள்ளி விலையானது கிலோவுக்கு 60,829 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இதே சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1846 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது.
முக்கிய லெவல்
இன்று வெளியாகவிருக்கும் பணவீக்க தரவின் மத்தியில் தங்கம் விலையானது அதிக ஏற்ற இறக்கம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கத்தின் சப்போர்ட் லெவலானது 1840 – 1830 டாலர்களாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 1862 – 1871 டாலர்களாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே வெள்ளி சப்போர்ட் லெவல் ஆனது 21.55 – 21.35 டாலர்களாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் – 22.05 – 22.25 டாலர்களாகவும் காணப்படுகின்றது.
விலை குறையலாம்
கோடக் செக்யூரிட்டீஸ் தங்கம் விலையானது சர்வதேச காரணிகளுக்கு மத்தியில், தங்கம் விலையானது மேற்கோண்டு ஏற்ற இறக்கம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்கத்தினால் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அடுத்து வரும் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முர்தலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையில் அழுத்தம் ஏற்படலாம் என எதிர்ப்படுகிறது.
gold discounts jump to highest in 2 months
Dealers in India have offered $ 10 an ounce of gold as a discount, according to a Reuters report.