சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவிக்கு தேனியில் மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாளத்தில், சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடைபபெற்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், தேனியைச் சேர்ந்த ரஷ்ஷிதா பாரதி கலந்துகொண்டு ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.
சர்வதேச அளவில் 5 பதக்கங்களை குவித்து சொந்த ஊர் திரும்பிய மாணவிக்கு தேனியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தேனி மாவட்ட விளையாட்டு கழக தலைவர் முத்துராமலிங்கம் விளையாட்டு கழக செயலாளர் சிவா சமூக ஆர்வலர் பெஸ்ட் ரவி மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளானோர் பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM