கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது.
மலேசியாவில் 2018-ல் ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது.
அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீர்ந்தது சோவியத்-ரஷ்ய ரக ஆயுதங்கள்., நட்பு நாடுகளை மட்டுமே நம்பி இருக்கும் உக்ரைன்!
இந்த நிலையில், மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் (Wan Junaidi Tuanku Jaafar) தெரிவித்தார்.
மரண தண்டனைக்கு பதிலாக என்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும் என்றார்.
“இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அனைத்துத் தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முன்னுரிமையைக் காட்டுகிறது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சன்னலை மூடுங்கள்! பக்கத்து நாட்டிலிருந்து வீசும் காற்றில் கொரோனா வைரஸ்: சீனா அச்சம்
மரணதண்டனை கட்டாயமாக இருக்கும் குற்றங்களுக்கு, நீதிபதியின் விருப்பப்படி மரண தண்டனை வழங்கக்கூடிய பல குற்றங்களும் உள்ளன.
மேலும், இந்த செயல்முறை மக்கள் கற்பனை செய்வது போல் எளிதானது அல்ல என்று கூறிய வான் ஜுனைடி, மாற்றங்களைச் செய்வதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும், அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று கூறினார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே வேளையில், பிரச்சாரகர்களும் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர்.