பாஜக சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரும் போட்டி போடுகின்றனர். மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் குபேந்திர ரெட்டியும் களத்தில் உள்ளார். இந்
இந்த நிலையில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஸ்ரீனிவாச கவுடா, தமது கட்சியின் வேட்பாளருக்குப் பதிலாக காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து, அக்கட்சியின் தலைவரான குமாரசாமி உள்ளிட்டோரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தான் ஏன் கட்சி மாறி வாக்களித்தேன் என்பது குறித்து அவர் கூறும்போது, ‘ எனக்கு காங்கிரஸ் கட்சியைப் பிடிக்கும். அதனால் அந்த கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்தேன்’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏவான ரேவண்ணா, தான் வாக்களித்த ஓட்டுச்சீட்டை காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரிடம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது.
மாநிலங்களவை எம்பி தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ ஒருவர், கட்சி மாறி காங்கிரசுக்கு வாக்களித்துள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.