அமெரிக்கப் பணவீக்க தரவுகள் வெளியாவதைத் தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தை அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் மும்பை பங்குச்சந்தையிலும் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது.
இன்றைய வர்த்தக சரிவில் ரீடைல் முதலீட்டாளர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன தெரியுமா..?
சீனாவில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள்.. அச்சத்தில் குறைந்த எண்ணெய் விலை!
சென்செக்ஸ், நிஃப்டி
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு 1016.84 புள்ளிகள் சரிந்து 54,303.44 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 276.30 புள்ளிகள் சரிந்து 16,201.80 புள்ளிகளை எட்டியுள்ளது.
டாப் 30 நிறுவனங்கள்
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் கோடாக் மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி, ரிலையன்ஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது. இதேபோல் டாடா ஸ்டீல், இன்போசிஸ், டெக் மஹிந்திபா, விப்ரோ பங்குகள் 2 முதல் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
அமெரிக்க பத்திர முதலீடு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க பத்திர முதலீட்டு லாபம் 3 சதவீதம் வரையில் அதிகரித்து அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து, வளரும் நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலர் வலிமை பெறும் இதேவேளையில் ரூபாய் மதிப்பு சரிவதோடு, டாலர் வருமானத்தை அதிகளவில் நம்பியிருக்கும் ஐடி துறை நிறுவனங்கள் அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொள்ளும்..
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வால் ரூபாய் மதிப்பு சரிவை கணிசமாக கட்டுப்படுத்த முடிந்தாலும், இன்று வெளியாகும் அமெரிக்கப் பணவீக்க தரவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு கேலன் அந்நாட்டின் பல இடத்தில் 6 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி
இதற்கிடையில் ஐரோப்பிய மத்திய வங்கி 2011ஆம் ஆண்டுக்கு பின்பு அடுத்த மாதம் தனது வட்டி விகிதத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து செப்டம்பர் மாதம் கூடுதலான வட்டி உயர்வும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா வர்த்தக சந்தை
திங்கட்கிழமை வர்த்தகம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை விடவும் மோசமான வர்த்தகத்தைப் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய அமெரிக்கா வர்த்தக சந்தையை கூர்ந்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
Why Sensex fell over 1,000 points today June 10, 2022
Why Sensex fell over 1,000 points today சென்செக்ஸ் குறியீடு 1000 புள்ளிகள் சரிவு என்ன காரணம்..!