Commonly used Passwords: ஆன்லைன் பாதுகாப்பு என்பது இக்காலத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், உங்கள் பணம், புகைப்படங்கள் உடன் பிற முக்கிய ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைனில் உள்ளன.
எனவே உங்கள் கணக்குகளின் கடவுச்சொல் வலுவாக இருக்க வேண்டும். ஆன்லைன் தகவல் பாதுகாப்பிற்கு கடவுச்சொற்கள் மிகவும் அவசியம். கணினிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளை ஹேக் செய்ய பலர் அவ்வப்போது முயற்சி செய்கிறார்கள்.
Rummy Online: மக்களுக்கு பொறி வைக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள்!
எனவே எந்த ஹேக்கரும் ஸ்மார்ட்போன் அல்லது கணினியை ஹேக் செய்ய விரும்பினால், முதலில் கடவுச்சொல்லை ஹேக் செய்கிறார். இதனால், உங்கள் கடவுச்சொல் வலுவாக இருப்பது மிகவும் முக்கியம். உங்களிடம் வலுவான கடவுச்சொல் இல்லையென்றால், நீங்கள் சிக்கலில் சிக்கலாம்.
வெளியான தகவல்கள்
Nord Password இன் வருடாந்தர ‘மிகவும் பொதுவான கடவுச்சொற்கள்’ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 2021இல் ஆராய்ச்சியாளர்கள் தரவை பல வகைகளாகப் பிரித்தனர்.
வெவ்வேறு நாடுகளின் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் புள்ளிவிவர பகுப்பாய்வு செய்யப்படுகிறது. அதிகம் பயன்படுத்தப்படும் 50 கடவுச்சொற்களின் பட்டியல் அதிலிருந்து பெறப்பட்டுள்ளது.
Indian Railways: இனி ரயிலில் நிம்மதியாகத் தூங்கலாம் – இந்தியன் ரயில்வே உங்களை எழுப்பி விடும்..!
இந்தியாவில் மிகவும் பொதுவான கடவுச்சொற்கள் பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த பாஸ்வேர்டுகள் ஒரு நொடியில் ஹேக் செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
எவரும் ஹேக் செய்யக்கூடிய 50 கடவுச்சொற்கள் இங்கே
Password1234567891234567812345612345678901234567qwertyabc123xxxiloveyoukrishna123123abcd12341qaz1234password1welcome654321computer123qwerty123qwertyuiop111111passw0rd987654321dragonasdfghjklmonkeyabcdefmotherpassword123zxcvbnmsweetysamsungiloveuasdfghqwe123p@ssw0rdhello123666666asdf1234lovelycreativeengineersuccessabcdefghsrinivasprincegoodluckmaster
சிறந்த பாஸ்வேர்டுகளை எப்படி அமைப்பது?
எனவே, பாஸ்வேர்டுகளை போடும் முன் ஆங்கிலத்தில் ஒரு பெரிய எழுத்து, ஒரு எண், எதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் (.,-_*) இருப்பதை உறுதி செய்யவேண்டும். குறைந்தது பாஸ்வேர்டுகள் 8 எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
செய்தி தொடர்பான உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள். இதே போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள சமயம் தமிழ் டெக் பக்கத்துடன் இணைந்திருங்கள்.