டெல்லி: 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் ஒளிபரப்புக்கான ஏலம் போட்டியில் இருந்து பிரபல நிறுவனமான அமேஷான் பின்வாங்கியுள்ளது.
2023ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் தொடர்பான போட்டியில் இருந்து பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் விலகுவதாக அறிவித்து உள்ளது. இதையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடைபெற்று முடிந்த 15வது ஐபிஎல் போட்டியின்போது டைட்டிலை டாடா நிறுவனம் கைப்பற்றியது. இதையடுத்து, அடுத்த ஆண்டுக்கான போட்டி யிலும் டைட்டிலை கைப்பற்ற டாடா தயாராகி வருகிறது. இதற்கான ஏலம் சுமார் 1000 கோடி ரூபாய் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் பிராட்காஸ்டிங்-ன் 5 வருடத்திற்கான உரிமை 40,000 கோடி ரூபாய் முதல் 50,000 கோடி ரூபாய் வரை செல்லக்கூடும் என்று சந்தை கணிப்புகள் கூறுகிறது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு ஏலத்தைக் கைப்பற்றிய ஸ்டார் குரூப் 5 வருடத்திற்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை 16,347.50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது. இந்த நிலையில், அமேசான் பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால், பார்வையாளர்கள் எண்ணிக்கையும் வெகுவாக சரிந்ததாக கூறப்படுகிறது. அதாவது, 33 சதவீதம் பார்வையாளர்கள் ஐபிஎல் போட்டிகளை நிராகரித்த காரணத்தால், அடுத்த ஆண்டுக்கான போட்டி எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது என்றும், குறைந்த அளவிலேயே ஒப்பந்தம் செய்யப்படும் நிலை ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
2023ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தில் அமேசான், டிஸ்னி ஸ்டார், ரிலையன்ஸ், வாய்காம் ஸ்போர்ட்ஸ், 18 ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், சோனி குரூப், கார்ப் டிரீம் ஸ்போர்ட்ஸ், இன்க் ஆல்பபெட் இன்க் (கூகுள்), சூப்பர்ஸ்போர்ட், தென்னாப் பிரிக்கா ஆப்பிள் இன்க், என பல நிறுவனங்கள் களத்தில் உள்ளன. அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்றவாறு 4 பிரிவுகளாகப் போட்டிகளின் ஒளிப்பரப்பை ஏலம் விட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்யுள்ளது. இந்த சூழலில்தான் அமேசான் போட்டியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளது.
இதேபோல் டிஜிட்டல் மற்றும் டிவி உரிமைகள் எனத் தனித்தனியாகவும், இந்தியா மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தைத் தனித்தனியாகவும் ஏலம் விட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏலப் போரில் ஈடுபடுவதை விட அதில் இருந்து வெளியேறுவதே சிறந்தது என அமெரிக்கப் நிறுவனமான அமேஷான் முடிவு செய்துள்ளதாகவும், லீக்கிற்கான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமைகளுக்காக அதிக செலவு செய்வது வணிக அர்த்தத்தைத் தரவில்லை என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில், Viacom18 மூலம் ரிலையன்ஸ், ஸ்போர்ட்ஸ்18 டிவி சேனலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம் விளையாட்டு ஒளிபரப்பில் நுழைந்துள்ளது.
அமேசான் ஏற்கனவே ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரீமிங் லீக்கில் நுழைந்து இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.