ஒரே நாளில் ரூ.3.2 லட்சம் கோடி காலி.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய சந்தையானது சரிவில் தொடங்கிய நிலையில், முடிவில் பலத்த சரிவிலேயே முடிவடைந்தது. குறிப்பாக சென்செக்ஸ் 1016 புள்ளிகள் சரிந்து, 54,303 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 276 புள்ளிகள் குறைந்து, 16,201 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, கடந்த அமர்வில் 254.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது இன்று 251.81 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

சந்தை மதிப்பு சரிவு

ஒரே நாளில் 3.2 லட்சம் கோடி ரூபாயாக சந்தை மதிப்பானது சரிவினைக் கண்டுள்ளது. தற்போது சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்திற்கு மத்தியில், ஈக்விட்டி சந்தையில் பெரியளவிலான ஏற்ற இறக்கம் காணப்படுகின்றது. இன்று வாரத்தின் கடைசி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் புராபிட் புக்கிங் காரணமாகவும் சந்தையானது சரிவினைக் கண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ் சரிவு

சென்செக்ஸ் சரிவு

சென்செக்ஸ் நடப்பு ஆண்டில் 6.78% அல்லது 3950 புள்ளிகள் குறைந்து முடிவடைந்துள்ளது. நிஃப்டி 2.85% புள்ளிகள் குறைந்து, 1165 புள்ளிகளாக சரிவினைக் கண்டும் முடிவடைந்துள்ளது. இதே ஒரு ஆண்டில் சென்செக்ஸ் 3.83% அல்லது 2002 புள்ளிகளாகவும், நிஃப்டி 2.85% அல்லது 449 புள்ளிகள் ஏற்றத்திலும் காணப்படுகின்றது.

2 வார வீழ்ச்சியில் சந்தை
 

2 வார வீழ்ச்சியில் சந்தை

கடந்த 6 வர்த்தக அமர்வுகளில் 5வது நாளாக சந்தை வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக சர்வதேச சந்தையில் உலகளாவிய குறிப்புகளால் சந்தையானது சரிவினைக் கண்டுள்ளது. அமெரிக்க பணவீக்க தரவானது வெளியான நிலையில் சந்தையானது 2 வார குறைந்தபட்ச அளவை எட்டியது.

 ஃபெடரல் வங்கியின் முடிவு?

ஃபெடரல் வங்கியின் முடிவு?

ஜூன் 14 -15 ஃபெடரல் வங்கியானது கூட்டத்தினை வைத்துள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிஃப்டி சப்போர்ட் லெவல் ஆனது, 16,204, 16,026 புள்ளிகளாகவும், ரெசிஸ்டன்ஸ் லெவல் 16,356 ஆகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.3.2 lakh crore investor wealth lost as sensex closes 1000 points lower

Market value of companies listed on the BSE was Rs 254.95 lakh crore in the last session. Today it is down to 251.81 lakh crore rupees.

Story first published: Friday, June 10, 2022, 21:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.