விஜய் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா தனுஷ்?
கமலின் விக்ரம் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் 67 வது படத்தை இயக்கப் போகிறார். மாஸ்டர் பட கூட்டணி மீண்டும் இணையப்போகிறது என்ற இந்த தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஜய் 67 வது படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, விக்ரம் படத்தில் இடம் பெற்ற சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தைப் போலவே தனுசுக்கும் ஒரு பவர்புல்லான வில்லன் வேடத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனபோதும் இது குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் விஜய்யும் தனுஷும் இணைத்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.