தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ப்ரஸ் சொகுசு கப்பல் புதுச்சேரி கடல் பகுதிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டதால், மீண்டும் சென்னையை நோக்கி திரும்பியது.
எம்ப்ரஸ் சொகுசு கப்பலில் சூதாட்டம் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதால் அந்த கப்பல் புதுச்சேரி வர ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
துறைமுக அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறாததால் அந்த கப்பல் புதுச்சேரி கடல் எல்லைக்குள் நுழைய கடற்படை அதிகாரிகள் தடை விதித்தனர். சில மணி நேரம் புதுச்சேரி கடல் எல்லைக்கு வெளியே நங்கூரமிடப்பட்டிருந்த அந்த சொகுசு கப்பல் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது.