IIFL ஹோம் பைனான்ஸ்-ல் அபுதாபி நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு..!

ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் 20% பங்குகளை ரூ.11,000 கோடி மதிப்பில் சுமார் 2,200 கோடி ரூபாய்க்கு அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (ADIA) வாங்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மலிவு விலையில் வீட்டு வசதி நிதிப் பிரிவில் தனியார் பங்கு முதலீட்டாளரால் செய்யப்படும் மிகப்பெரிய பங்கு முதலீடாகம்.

ஐஐஎப்எல் பைனான்ஸ்

ஐஐஎப்எல் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் இந்த ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ், இந்தியாவில் வட்டி விகித உயர்வால் ரியல் எஸ்டேட் வர்த்தகம் சரியும் என சந்தை கணிப்புகள் கூறுகையில் வளர்ந்து வரும் வீட்டுக் கடன் வர்த்தக தேவையைப் பூர்த்தி செய்யவும், புதிய சந்தைகளுள் நிழையவும் கூடுதல் மூலதனத்தைப் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

ரூ.52,000 கோடி கடன் வர்த்தகம்

ரூ.52,000 கோடி கடன் வர்த்தகம்

ஐஐஎப்எல் பைனான்ஸ் சுமார் 52,000 கோடி ரூபாய் அளவிலான கடன் வர்த்தகம் மற்றும் 12,500 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் சந்தை மதிப்பையும் அதகரிக்க முடியும்.

ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ்
 

ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ்

இதேவேளையில் ஐஐஎப்எல் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் 24,000 கோடி ரூபாய் அளவிலான கடன் வர்த்தகத்தையும், 11,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தான் 20% பங்குகளை சுமார் 2,200 கோடி ரூபாய்க்கு அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி (ADIA) வாங்க முடிவு செய்துள்ளது.

7.57 சதவீதம் உயர்வு

7.57 சதவீதம் உயர்வு

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ஐஐஎப்எல் பைனான்ஸ் பங்குகளின் விலை 7.57 சதவீதம் அதிகரித்து 353.90 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் போது, ​​ஐஐஎப்எல் குழுமத்தின் தலைவர் நிர்மல் ஜெயின், வளர்ந்து வரும் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதில் ADIA நீண்ட கால அர்ப்பணிப்பு மற்றும் வளமான அனுபவத்தை அளிக்கிறது.

230 கிளைகள்

230 கிளைகள்

IIFL Home Finance நிறுவனம் இந்தியாவில் 230 கிளைகளுடன் 168,000 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சிறிய அளவிலான வீட்டுக் கடன்களையும், சொத்துக்கு எதிரான கடன்கள் மற்றும் கட்டுமான நிதி ஆகியவற்றை வழங்குகிறது.

 பசுமைக் கட்டிடங்கள்

பசுமைக் கட்டிடங்கள்

கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கும் செலவு குறைந்த கட்டமைப்புகளை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்ட Kutumb தளத்தின் மூலம் வீட்டு மேம்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து மலிவு விலையில் பசுமைக் கட்டிடங்கள் கட்டுவதையும் இது ஊக்குவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Abu Dhabi ADIA to buy 20% in IIFL Home Finance

Abu Dhabi ADIA to buy 20% in IIFL Home Finance IIFL ஹோம் பைனான்ஸ்-ல் அபுதாபி நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு..!

Story first published: Friday, June 10, 2022, 21:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.