தமிழில் பிசியாகும் அவந்திகா மிஸ்ரா
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் டில்லியை சேர்ந்த அவந்திகா மிஸ்ரா. மீக்கு மீரா மாக்கு மீமே என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அதன்பிறகு அங்கு பல படங்களில் நடித்தார். தமிழில் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது அவர் நடித்து முடித்துள்ள டி பிளாக் படம் வெளிவர இருக்கிறது. இதில் அவர் அருள்நிதி ஜோடியாகவும், கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளார். அடுத்து அவர் நெஞ்சமெல்லாம் காதல் படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் 2 புதிய படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுபற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறது.