4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் – தனுஷ்கோடியில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்க முடிவு!

தமிழ்நாட்டில் 4 ஆயிரம் மெகாவாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தனுஷ்கோடியில் கடலுக்குள் காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாட்டில் 4 ஜிகா வாட்ஸ், அதாவது 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யும் வகையில் கடலுக்குள் காற்றாலைகளை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் 4 மாதங்களில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
450 MW offshore wind park to be built in Adriatic Sea
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் காற்று மின்சாரத்துக்கான பரிசோதனை மையத்தை அமைக்க மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், அந்த இடத்திலேயே புதிய காற்றாலை அமைக்கப்படும் எனத் தெரிகிறது. கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின்சாரம் தயாரிப்பது ஆசிய – பசிபிக் பிராந்தியத்திலேயே இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.
Dhanushkodi | WhatsHot Bangalore
இதன்படி, தனுஷ்கோடியில் கடற்கரையில்இருந்து 100 மீட்டர் தொலையில் கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. கடல்நீருக்கடியில் 50 மீட்டர் ஆழத்தில் காற்றாலைகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட உள்ளது. இந்த அடித்தளம் வலுவானதாக இருக்கும் வகையில், திட்டமதிப்பின் 70 விழுக்காடு தொகை அடித்தளத்துக்கே செலவு செய்யப்பட உள்ளது.
World's Largest Offshore Wind Farm Now Operational - Yale E360
இந்த காற்றாலை மின்சாரத்தால் 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக மே 15 முதல் செப்டம்பர் 15 வரையே காற்றாலை மின்சார உற்பத்திக்கான சீசன் உள்ள நிலையில், கடலுக்குள் அமைக்கப்படும் காற்றாலைகளால் ஆண்டு முழுவதும் மின்சாரம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
US has only one offshore wind farm, but that's about to changeSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.