யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலை பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கத்தகடு அகழ்வு
குறித்த வீட்டின் வளாகத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தகடு புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தோண்டி எடுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் குறித்து வெளியான தகவல்
கைது செய்யப்பட்ட பதுளை, மகரகம, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 6 சந்தேகநபர்களும் புதையல் தோண்டும் பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஏழு பேரும் விசாரணைகளின் பின் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.