இந்திய பெருங்கடலின் கிங் ‛அகிலன்' – டீசர் வெளியீடு
பூலோகம் படத்திற்கு பின் இயக்குனர் கல்யாண், நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ள படம் ‛அகிலன்'. நாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸாக நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் துறைமுகத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களின் பின்னணியே படத்தின் கதையாக அமைந்துள்ளது என புரிந்து கொள்ள முடிகிறது. துறைமுகத்தில் கிங்காக அகிலன் என்ற வேடத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவரை மீறி எந்த ஒரு விஷயமும் நகராது. ‛‛ஐயம் தான் கிங் ஆப் இந்தியன் ஓசன், கடலில் இருந்து உப்பை பிரிக்கலாம் ஆனால் ஹார்பரில் இருந்து அகிலனை பிரிக்க முடியாது'' என டயலாக் பேசி உள்ளார் ஜெயம் ரவி. அந்தளவுக்கு அந்த பகுதியின் டானாக அவர் உள்ளார் என புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.