முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்து வந்ததாக கூறப்பட்ட கிரிப்டோகரன்சி விலை தற்போது மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளதால் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை மறந்துவிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பணவீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் உலகிலுள்ள அனைத்து பங்குச் சந்தைகளில் சரிவில் இருந்தாலும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆனால் திடீரென கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடுமையான பாதிக்கப்பட்டு உள்ளது என்பதும் அதன் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை தற்போது இழந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில கிரிப்டோகரன்சியின் மதிப்பு 50% வரை வீழ்ச்சி அடைந்து உள்ளன. இதனால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பாவில் விரைவில் ரெசிஷன்.. உச்சகட்ட பீதியில் இந்திய ஐடி – BPM நிறுவனங்கள்..!
கிரிப்டோகரன்சி முதலீடு
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் ஒரு காலத்தில் மிகப்பெரிய லாபத்தை பெற்ற நிலையில் தற்போது அதன் மதிப்பு குறைந்து வருவதற்கு நிலையற்ற தன்மையும், கிரிப்டோகரன்ஸி மீதான நன்பகத்தன்மையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது .
மந்தநிலை
கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு இந்த 12 மாதங்களில் மந்தநிலையில் உள்ளன. ஏனெனில் பெடரல் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்த ஒருசில முக்கிய நடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கிரிப்டோவில் முதலீடு செய்து ரகசியமாக வைத்திருந்தவர்கள் அதனை வெளியே எடுத்து விற்க தொடங்கியதால் அதன் மதிப்பு எதிர்பாராத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
ரகசியம்
இதனால் கிரிப்டோவில் முதலீடு செய்து ரகசியமாக வைத்திருந்தவர்கள் அதனை வெளியே எடுத்து விற்க தொடங்கியதால் அதன் மதிப்பு எதிர்பாராத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.
பிட்காயின்
கிரிப்டோகரன்ஸிகளில் பிரதானமானதாக கூறப்படும் பிட்காயின் கடந்த புதன்கிழமை 4.8 சதவீதம் சரிந்து 29,800 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது. கடந்த 15 மாதங்களில் மிகக்குறைந்த விலையில் பிட்காயின் வர்த்தகமாவதால் அதில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலானோர் தங்கள் முதலீட்டையே மறந்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும்.
பொருளாதார நிபுணர்கள்
கிரிப்டோகரன்சி மதிப்பு உயர்வதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒரு சில பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தாலும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு மீண்டும் முன்பு போல் உயராவிட்டாலும் ஓரளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என்று சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
கிரிப்டோகரன்ஸியின் எதிர்காலம்
கிரிப்டோகரன்ஸியின் எதிர்காலம் கணிக்க முடியாததாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கூறி வரும் நிலையில் உண்மையில் கிரிப்டோகரன்சியின் எதிர்காலம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More crypto in-the-money traders dwindle, hinting at capitulation
More crypto in-the-money traders dwindle, hinting at capitulation | 50% வரை வீழ்ச்சி அடைந்த கிரிப்டோகரன்ஸி: எதிர்காலத்தில் என்ன ஆகும்?