இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்வதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கான தகுதியை இழந்து வரும் வங்கிகளை அவ்வப்போது உரிமத்தை ரத்து செய்து வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல வங்கிகள் தங்களது உரிமைகளை இழந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது.
இதனால் இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பணம் எடுக்க முடியாது மற்றும் பணம் டெபாசிட் செய்யவும் முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.15000 வரை ஆட்டோ பேமெண்ட்.. இனி ஒடிபி தொல்லை இல்லை.. ஆர்பிஐ செம அறிவிப்பு..!
முதோல் கூட்டுறவு வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் செயல்பாடுகளையும் கூர்ந்து கவனித்து நிதி நிலை சரியில்லாத வங்கிகளை தொடர்ந்து செயல்படுவதற்கு தடை விதித்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள முதோல் கூட்டுறவு வங்கியின் (Mudhol Cooperative Bank) உரிமத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வங்கிக்கு ஒரு சில தடைகளையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உரிமம் ரத்து
கடந்த புதன்கிழமை முதல் இந்த வங்கியின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபாசிட்டை திருப்பிச் செலுத்துவதற்கும் புதிய டெபாசிட் பணத்தை பெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் புதிதாக பணம் போடவோ அல்லது தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்த வங்கியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த வங்கியிடம் தற்போது போதிய மூலதனம் இல்லை என்றும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் சுத்தமாக இல்லை என்றும் முடிவு செய்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
99 சதவிகித முழுத்தொகை
ஆனால் அதே நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு 99 சதவீத முழுத் தொகையையும் டெபாசிட் மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவாதம் அளித்துள்ளது. இதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ரூ.5 லட்சம்
டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகத்திலிருந்து இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளருக்கும் விதிகளின் அடிப்படையில் ஐந்து லட்ச ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை 16.69 கோடி வரை டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத கழகம் பணம் செலுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
RBI cancels licence of Mudhol Co-op Bank, Bagalkot, Karnataka
RBI cancels licence of Mudhol Co-op Bank, Bagalkot, Karnataka | பிரபல வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ: இனி பணம் போடவும் முடியாது, எடுக்கவும் முடியாது!