ரீசார்ஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் PhonePe, Paytm: இனி அந்த பக்கமே போகாதீங்க!

மொபைல் போன் ரீசார்ஜ் செய்வதற்கு போன் PhonePe மற்றும் Paytm கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக பயனர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகின்றனர்.

இந்தியாவில் யுபிஐ செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்யும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக PhonePe, Paytm ஆகிய செயல்களின் மூலம் பலர் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் போனுக்கு ரீசார்ஜ் செய்தால் PhonePe, Paytm செயலிகளில் குறைந்தபட்சமாக ஒரு ரூபாய் வசூல் செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென படிப்படியாக இந்த செயலிகள் கட்டணத்தை அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

நாங்களும் இந்திய நிறுவனம் தான்: போன்பே சி.இ.ஓ சமீர் நிகாம் தகவல்

ரீசார்ஜ்

ரீசார்ஜ்

இதனால் பொதுமக்களுக்கு ரீசார்ஜ் செய்யும் தொகையை விட அதிகப்படியாக செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது. கடந்த ஆண்டு முதல் PhonePe, Paytm ஆகியவை அதிக கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் வந்த நிலையில் கடந்த மார்ச் முதல் மேலும் கட்டணம் அதிகரித்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

PhonePe - Paytm

PhonePe – Paytm

PhonePe மற்றும் Paytm ஆகிய இரண்டு நிறுவனங்களும் அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்து விட்டதாக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக Paytm தகவல் தெரிவித்துள்ளது. இது நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் விளக்கம் அளித்துள்ளது.

அதிருப்தி
 

அதிருப்தி

ஆனால் PhonePe நிறுவனம் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கூட ஒன்று முதல் ஆறு ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து ரீசார்ஜ் செய்வதற்கு அந்த செயலியை தவிரக்க தொடங்கிவிட்டனர்.

செயலி

செயலி

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் மக்கள் தாங்கள் எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டை பயன்படுத்துகிறார்களோ, அதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் செயலியை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் எந்த விதமான கூடுதல் கட்டணமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

உதாரணமாக ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் செய்வதற்கு செயலி வைத்திருப்பதால் சம்பந்தப்பட்ட செயலியில் லாக்-இன் செய்து ரீசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் இன்றி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மூன்றாவது தரப்பு செயலியை பயன்படுத்துவதால் தான் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

கூகுள்பே - அமேசான்பே

கூகுள்பே – அமேசான்பே

அதேபோல் கூகுள்பே, அமேசான்பே போன்ற செயலிகளில் மொபைல் ரீசார்ஜ் செய்தாலும் இந்நிறுவனங்கள் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பதால் இதுபோன்ற செயலிகளையும் பயன்படுத்தி பொதுமக்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

லாபம்

லாபம்

PhonePe, Paytm போன்ற செயலிகள் லாபத்திற்காக பொதுமக்கள் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதால் அந்த நஷ்டத்தை தவிர்க்க இந்த செயலிகளை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு தவிர்த்தாலே இந்நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தானாகவே நிறுத்திவிடும் என்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

After PhonePe, Paytm Starts Taking Surcharge on Mobile Recharges

After PhonePe, Paytm Starts Taking Surcharge on Mobile Recharges | ரீசார்ஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் PhonePe, Paytm: இனி அந்த பக்கமே போகாதீங்க!

Story first published: Saturday, June 11, 2022, 7:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.