பங்குச்சந்தை பல்வேறு காரணங்களால் வீழ்ச்சி அடையும் போது மோசமான பங்குகள் மட்டுமின்றி நல்ல நிறுவனத்தின் பங்குகளும் சரியும்.
ஆனால் இந்த நேரத்தில் நல்ல நிறுவனத்தின் பங்குகள் சரிய சரிய வாங்கி வைத்துக் கொள்வதுதான் பங்குசந்தையில் புத்திசாலித்தனம் என்று கூறப்படுவதுண்டு.
அந்த வகையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் தற்போது 52 வார குறைந்தவிலையில் இருப்பதால் அந்த பங்கை தாராளமாக வாங்கலாம் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நொய்டா விமான நிலைய ஒப்பந்தம்: டாடா நிறுவனம் செய்த மேஜிக்!
டாடா ஸ்டீல்
நேற்றைய பங்கு வர்த்தகத்தின் போது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு 15 ரூபாய் சரிந்து ரூ.991.80 என்ற விலையில் வர்த்தகமானது. இது அந்நிறுவனத்தின் கிட்டத்தட்ட 52 வார குறைவான விலை ஆகும்.
விலை குறையும்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு ரூ.1357.90 என்று இருந்த நிலையில் தற்போது 26 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த சில மாதங்களில் டாடா ஸ்டீல் மட்டுமின்றி மற்ற உலோக நிறுவனங்களின் பங்குகள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்து வருகிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த விலை இன்னும் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கலால் வரி
மத்திய அரசு ஸ்டீல் ஏற்றுமதிக்கான கலால் வரி விதித்த பிறகுதான் ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் குறைய ஆரம்பித்தது. வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் மிகப்பெரிய லாபம் அடைந்து வந்த ஸ்டீல் நிறுவனங்கள், கலால் வரி விதித்தபின் பெரிய அளவில் லாபம் கிடைக்கப் போவதில்லை என்பதால் தான் ஸ்டீல் நிறுவனத்தின் பங்குகள் குறைய ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஸ்டீல் தேவை
அதேபோல் தற்போது நாடு முழுவதும் பருவமழை விரைவில் பெய்யும் என்று எதிர்பார்ப்பதால் ஸ்டீல் தேவையும் குறையும் என்று கூறப்படுகிறது. அதனால் டாடா ஸ்டீல் உள்பட ஸ்டில் நிறுவனங்களின் பங்குகள் குறைந்து வருவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாங்கலாமா?
எனவே இந்த ஆண்டின் நான்கு காலாண்டு உடன் ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் குறையும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் டாடா ஸ்டீல் பங்குகள் நம்பகத்தன்மை உடையது என்றும் அந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காரணமாக சரிந்தாலும் கண்டிப்பாக பங்கு சந்தை ஏற்றம் காணும் போது நல்ல விலைக்கு உயரும் என்றும் அதனால் இந் நிறுவனத்தின் பங்குகளை யோசிக்காமல் வாங்கலாம் என்றுதான் பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் எந்த பங்குகளை வாங்கலாம், எந்த பங்குகளை தவிர்க்கலாம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு என்பதால் டாடா ஸ்டீல் பங்குகளை வாங்குவதும் அவரவர் முடிவை பொருத்ததுதான்
முதலீடு
எந்த ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளும் குறையும்போது அதை ஒரு ஜாக்பாட் என கருதி கொண்டு நம்மிடம் இருக்கும் பணத்தில் அந்த நிறுவனத்தில் படிப்படியாக முதலீடு செய்யலாம். அது பங்கு சந்தை ஏற்றத்தின் போது நமக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tata Steel shares near 52-week low. Good time to buy after 26% dip in 2 months?
Tata Steel shares near 52-week low. Good time to buy after 26% dip in 2 months? | 52 வார குறைந்த விலையில் டாடா ஸ்டீல்: யோசிக்காமல் வாங்குங்க!