சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து மாநிலப் போலீசாரும் தயார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் , ராஜஸ்தான், பஞ்சாப் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டத்தின்போது வன்முறை மூண்டு வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் பலர் காயம் அடைந்தனர்.
மாநில அரசுகள், காவல்துறையினர் சட்டம் ஒழுங்கைக் காக்க தயார் நிலையில் இருக்கும்படி உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.