கோடைக்காலத்தில் மட்டுமே நமக்கு கிடைக்கும் பழவகைகள் ஏராளம். இந்த பழவகை பட்டியலில் வெறும் வயிற்றில் சாப்பிட முடிகிற, உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பழமானது பப்பாளி ஆகும்.
நார்சத்து மிக்க இந்த பழத்தில் கலோரியின் அளவும் குறைவாக இருப்பதால், எடையை குறைக்கவும், கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒரு கப் பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், செரிமானப் பாதையில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தை சீராக்கும். இது வயிற்று உப்புசம், வயிறு வலி மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளுக்கு தீர்வாக இருக்கிறது.
பப்பாளி எப்படி உதவுகிறது?
வைட்டமின் ஏ மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்தை உள்ளடக்கிய பப்பாளியால், உடலில் இருந்து நச்சுகளை அகற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொற்றுநோய்களை பரப்பும் கிருமிகளிடமிருந்து நம்மை காக்க உதவுகிறது.
நீங்கள் உடல் எடையை குறைக்க முடிவுசெய்திருந்தால், காலையில் ஒரு கப் பப்பாளியை உங்கள் உணவு பழக்கத்துடன் சேர்த்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்து, குறைவான கலோரி ஆகியவை உள்ளடக்கிய பப்பாளி, தேவையற்ற பசியை அகற்ற உதவுகிறது.
பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதாக அறியப்படுகிறது. மேலும் பப்பாளி இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
பப்பேன் என்ற என்சைம் பப்பாளி பழத்தில் இருப்பதால், உடல் காயப்பட்டால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, மேலும் இயற்கையான வலி நிவாரணியாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. உடல் காயப்பட்டால் உண்டாகும் வீக்கத்தை கட்டுப்படுத்த சைட்டோகைன் என்கிற புரதம் தேவைப்படும். அதை பாப்பெய்ன் என்கிற என்சைம் நம் உடலில் அதிகரிக்க வைப்பதாக கூறப்படுகிறது. பப்பாளியில் உள்ள லுடீன், ஜீயாக்சாண்டின் மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் கண்களுக்கு நல்லது என நம்பப்படுகிறது.
பப்பாளி பழத்தில் நுகர்வு மற்றும் மனிதனின் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி பார்த்தோம். அதே வேளையில், பழம் ஒருவரின் தோலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது.
வைட்டமின் சி பப்பாளியின் முதன்மை ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதால், பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகள் உருவாகிறது, அவை ஒன்றாகச் சேர்க்கப்படும்போது, சருமம் மேன்மை பெற உதவுகிறது. அவை சருமத்தின் சுருக்கங்கள் மற்றும் வயதானால் வரும் பிற அறிகுறிகளை வரவிடாமல் காக்கிறது.
நீங்கள் எப்படி பப்பாளியை சாப்பிட வேண்டும்?
பப்பாளி பழம் பழுத்தவுடன் பச்சையாக சாப்பிடுவதே சிறந்த வழி. இருப்பினும், இது இனிப்புகள், சாலடுகள் ஆகியவற்றில் சேர்த்துக்கொள்ளலாம்.
யார் இதை உண்ணக்கூடாது?
பப்பாளியில் லேடெக்ஸ் இருக்கிறது, இது கர்ப்பப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளிப் பழங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.