தைவானுக்காகப் போரைத் தொடங்க தயக்கம் இல்லை என்றும் தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை நிலைநிறுத்துவது கட்டாயம் என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
“தைவான் சுதந்திரம்” என்ற சதித்திட்டத்தை முறியடித்து, தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதியுடன் நிலைநிறுத்துவதே சீனாவின் முடிவு என்று சீன அமைச்சர் உறுதிபட தெரிவித்தார்.
தைவான் சுதந்திரத்தை அறிவிக்கும் பட்சத்தில், பெய்ஜிங் “போரைத் தொடங்கத் தயங்காது” என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவை எச்சரித்தார்.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுடன் தனது முதல் பேச்சுவார்த்தையை நடத்திய சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கே, இந்த எச்சரிக்கையை வெளியிட்டதாக சீனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஷங்ரி-லா உரையாடல் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ள வந்த இரு நாடுகளின் உயர்நிலை தலைவர்களிடையே நடைபெற்ற சந்திப்பின்போது இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க | கம்போடியாவில் ரகசிய கடற்படை தளத்தை அமைக்க சீனா திட்டமிடுகிறதா
தைவானுக்கு அதன் சொந்த அரசாங்கம் உள்ளது, ஆனால் தீவு நாடான தைவான், தனது சொந்த பிரதேசத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடுகிறது.
“தைவானை சீனாவில் இருந்து பிரிக்க யாராவது துணிந்தால், சீன ராணுவம் எந்த விலை கொடுத்தாலும் போரைத் தொடங்க தயங்காது” என்று வெய், ஆஸ்டினை எச்சரித்தார், பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வு கியான், இதை தெவித்தார். காட்டினார்.
சீன பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, பெய்ஜிங் “தைவான் சுதந்திரம்” சதித்திட்டத்தை முறியடித்து, தாய்நாட்டின் ஒருங்கிணைப்பை உறுதியுடன் நிலைநிறுத்தும்” என்று சீன அமைச்சர் சபதம் செய்தார்.
அவர் “தைவான் என்பது, சீனாவின் தைவான் என்று வலியுறுத்தினார்… சீனாவைக் கட்டுப்படுத்த தைவான் விவகாரத்தைப் பயன்படுத்துவது ஒருபோதும் வெற்றிபெறாது” என்று சீன அமைச்சகம் கூறியது.
மேலும் படிக்க | பள்ளிப் புத்தகங்களில் ஆபாச ஓவியங்கள்: சீனாவில் சர்ச்சை
ஆஸ்டின் “(தைவான்) ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார், தற்போதைய நிலையில் ஒருதலைப்பட்சமான மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார், மேலும் தைவான் மீதான நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அவர் சீனாவுக்குக் அழைப்பு விடுத்தார்” என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) மீது, சீன போர் விமானங்கள் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், கடந்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்தபோது, பல தசாப்தங்களாக தொடர்ந்து வந்த அமெரிக்காவின் பாரம்பரியக் கொள்கையை உடைத்ததாகத் கருதப்பட்டது. அப்போது, ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், தைவானை சீனா தாக்கினால் வாஷிங்டன் ராணுவ ரீதியாக பாதுகாக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பின்னணியின் அடிப்படையில், தற்போது அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR