வாரத்தில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற முறையை இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் அமல்படுத்த தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் நான்கு நாட்கள் வேலை என்ற சோதனை திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ச் பல்கலைகழங்கள் & பாஸ்டன் கல்லூரி ஆகியவை ஒருங்கிணைத்து நடத்தும் இந்த சோதனை முயற்சியில் வங்கிகள், மருத்துவமனைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்ய உள்ளன.
இவ்வாறு வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் தங்கள் வேலைக்கான இலக்கை அடைகிறதா? என்பதை உறுதிப்படுத்தவே இந்த சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.3.5 கோடி சம்பளம்.. வேலை வேண்டாம் என தூக்கி எறிந்த ஊழியர்.. காரணத்தை கேட்டா கடுப்பாகிடுவீங்க..!
நான்கு நாட்கள் வேலை
இந்த நிலையில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை, மூன்று நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தை மத்திய அரசு இந்தியாவில் விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் வேலை நேரம் அதிகரிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலர் அபூர்வா சந்திரா அவர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை திட்டம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
12 மணி நேரம்
தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை செய்து வரும் நிலையில் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என்று மாற்றப்பட்டால் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது. இதனால் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை மற்றும் 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தால் உற்பத்தியில் எந்த விதமான பாதிப்பும் இருக்காது.
மாற்றம்
ஆனால் அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு எந்தவிதமான நிர்ப்பந்தமும் செய்யப்போவதில்லை என்றும் மாறிவிடும் கலாச்சாரத்திற்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார்.
ஷிப்ட் எண்ணிக்கை
இந்த திட்டத்திற்கு பெரும்பாலான தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றாலும் ஷிப்ட் எண்ணிக்கை குறையும் என்று ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 1
அடுத்த மாதம் அதாவது ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் இதனால் ஊழியர்களின் EPF பங்களிப்புகள், அலுவலக வேலை நேரம் மற்றும் சம்பளத்தில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழிலாளர் சட்டம்
புதிய தொழிலாளர் சட்டங்களின் விதிகளின்படி, ஊழியர்கள் நான்கு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். மீதமுள்ள மூன்று நாட்களுக்கு வார விடுமுறையைப் பெறுவார்கள்.
ஓய்வு
மேலும் புதிய வரைவு விதிகளின் விதிகளின்படி பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் பணமும், பணிக்கொடைத் தொகையும் அதிகரிக்கும். இது ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு சிறந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
Four Day Work Week, More PF, Other Changes Likely from July 1?
Four Day Work Week, More PF, Other Changes Likely from July 1?