பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர அக்ஷய் குமார். அவரது நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான சரித்திர திரைக்கதை கொண்ட படம் தான் சாம்ராட் பிரித்விராஜ்.
மன்னர் சாம்ராஜ் பிரித்விராஜ் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் அக்ஷய்க்கு ஜோடியாக முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் நடித்திருக்கிறார். அதுபோக சஞ்சய் தத், சோனு சூட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சுமார் 200 கோடி பட்ஜெட்டில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியிருந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளிலும் வெளியான இந்த படத்துக்கு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வரி விலக்கும் அளிக்கப்பட்டிருந்தன.
படத்திற்கு நல்ல வரவேற்பு வரும் என்ற பெருத்த நம்பிக்கையுடன் இருந்த படக்குழுவின் எண்ணம் தலைக்கிழாக போய் தியேட்டரில் இருந்தே ரத்து செய்யும் அளவுக்கு சாம்ராட் பிரித்விராஜ் படத்தின் நிலை உள்ளது.
200 கோடிக்கும் மேல் தயாரிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் முதல் வார கலெக்ஷன் வெறும் 50 கோடியைத்தான் தாண்டியிருக்கிறதாம். அதன்படி ரூ.10.70, 12.60, 16.10, 5, 4.25, 3.60, 2.80 என ஜூன் 3 முதல் 9 வரையிலான ஒரு வார கலெச்ஷன் வெறும் 55.05 கோடி ரூபாய்தானாம்.
இதுபோக டிக்கெட் ஏதும் சாம்ராஜ் பிரித்விராஜ் படத்துக்கு புக்கிங் ஆகாததால் வெளியான முதல் வாரத்திலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்படும் நிலைக்கு அக்ஷய் குமார் படம் சென்றிருக்கிறது. இது தயாரிப்பு மற்றும் படக்குழுவை பெருமளவில் அதிருப்தி அடையச் செய்திருக்கிறது.
இதே வேளையில் வெளியான கமலின் விக்ரம் படத்துக்கும், தெலுங்கில் வெளியான மேஜர் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதோடு நல்ல வசூலையும் குவித்திருக்கிறது.
முன்னதாக தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் இந்தியில் வெளியிடப்பட்டு தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வரும் வேளையில் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் இந்தி படங்கள் பெயரளவுக்கு கூட வரவேற்பு கிடைக்காமல் இருக்கிறது.
சாம்ராஜ் பிரித்விராஜ் படத்தை போன்று கடந்தமாதம் கங்கனா ரெனாவத் நடிப்பில் வெளியான 100 கோடி பட்ஜெட் கொண்ட படமான தக்கட் 10 கோடி ரூபாய் வசூலை கூட எட்டாமல் பெரும் நஷ்டத்துக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: