இந்தியாவின் எரிபொருள் பயன்பாடு மே மாதத்தில் முந்தைய ஆண்டைவிட 24 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2021ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் எரிபொருள் பயன்பாடு குறைந்திருந்தது.
இது நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதைக் காட்டுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.