தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுதினம் (ஜூன் 13) முதல் திட்டமிட்டப்படி பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதன்படி, 1 முதல் 10ம் வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.
அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.