சென்னை: தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சி என பாஜக மாயை பிரசாரம் செய்து வருகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அதிமுக ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து விலகாது என கருத்து தெரிவித்தார். மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனம் என பாஜக நுபுர் சர்மாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.