தற்போதைய செலாவணிவீத ஏற்பாடு: பின்னணி, இதுவரையிலான நேர்க்கணிய தாக்கம் , எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

இக்குறிப்பு தற்போதைய செலாவணிவீத ஏற்பாட்டிற்கான பின்னணி மற்றும் அது ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள நேர்க்கணிய தாக்கம் மற்றும் எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் என்பன தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்த எண்ணுகின்றது.

நாடு தற்போது மிகவும் சவால்மிக்கதொரு பொருளாதார சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்துள்ள வேளையில் அது வரலாற்றில் மோசமான சென்மதி நிலுவை நெருக்கடியினையும் கடந்து செல்கின்றது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையின் குறைபாட்டிற்கு மத்தியில் இலங்கை ரூபா பெருமளவிலான தேய்மான அழுத்தத்திற்கு உட்பட்டமையானது சமூகத்தில் செலாவணி வீதத்தின் பாரியளவிலான தேய்வடைதலின் பாதகமான தாக்கம் தொடர்பிலான கரிசனைகளுக்கு மத்தியில் சந்தையில் நிலவிய மட்டங்களுடன் ஒப்பிடுகையில் 2022 முன்னைய மாச்சுப் பகுதியில் செலாவணிவீத நிர்ணயத்தில் அளவிடப்பட்டதொரு சீராக்கத்தினைத் தேவைப்படுத்தியது. இருப்பினும், ஆரம்பத்தில் அளவிடப்பட்ட சீராக்கத்தினைத் தொடர்ந்து அதன் பின்னர் அனுமதிக்கப்பட்ட செலாவணிவீத நெகிழ்ச்சித்தன்மையின் பெறுபேறு சந்தைச் சக்திகளின் மூலமான பாரியளவிலான துரித தேய்வடைதலின் காரணமாக எதிர்பார்க்கைகளை இழந்தமையானது உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் நிலவிய குறிப்பிடத்தக்க திரவத்தன்மை அழுத்தங்களையும் அதேபோன்று சந்தைச் சீராக்கத்தில் தாமதத்தினையும் பிரதிபலித்திருந்தது. 2022 மாச்சில் அதிகளவிலான நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதித்தமையிலிருந்து செலாவணிவீத நடத்தையானது சென்மதி நிலுவையின் நெருக்கடியான சூழ்நிலைகளின் கீழ் செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிக்கும் போது வழிமுறைகளை கவனமாக ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான தேவைப்பாட்டினை எடுத்துக்காட்டுகின்றது.

மிகையான தேய்மானத்தினைத் தொடர்ந்து பணவீக்கமானது இறக்குமதிசெய்யப்பட்ட விலைகளினூடாக குறிப்பிடத்தக்களவு விரைவுபடுத்தப்பட்ட வேளையில் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான அத்தகைய மிகையான தேய்மானத்தின் இரண்டாம் சுற்றுத் தாக்கங்களும் அதனைத் தொடர்ந்து அவதானிக்கப்பட்டன. மேலும், செலாவணி வீதத்தின் தொடர்ச்சியான தேய்மானத்துடன் இணைந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் வெளிநாட்டுச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையின் காரணமாக வெளிநாட்டுச் செலாவணி வைத்திருப்போரின் மூலமான வெளிநாட்டுச் செலாவணி மாற்றல்கள் தாமதமடைந்ததுடன் இதற்கு மேலதிக தேய்மான எதிர்பார்க்கை மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தையில் வழங்கப்பட்ட உயர்ந்தளவிலான கட்டுப்பணம் என்பன காரணமாயமைந்ததன் மூலம் நாணயத்தில் மேலதிக அழுத்தங்களைச் சேர்த்திருந்தன. அதேவேளை, உத்தியோகபூர்வமற்ற சந்தையில் செலாவணி வீதத்திற்கான கேள்வி வங்கித்தொழில் முறைமைக்கு வெளியில் இறக்குமதிக் கேள்வியினை அதிகரிக்கின்ற நிதியினைப் பிரித்தெடுப்பதனை வளப்படுத்தியமையானது நாணயத்தில் மேலதிக அழுத்தங்களையும் அதேபோன்று வங்கித்தொழில் முறைமையில் அதிகரித்தளவிலான அழுத்தங்களையும் ஏற்படுத்தியிருந்தது. நாணய வீதங்களின் குறிப்பிடத்தக்க தளம்பலானது வங்கிகளுக்கிடையிலான செலாவணி வீதங்கள் அதேபோன்று வாடிக்கையாளர் கொள்வனவு மற்றும் விற்பனை வீதங்களை முறிவடையும் பாங்கில் உயர் மட்டங்களுக்கு அதிகரித்து, நாணயத்தில் தகாத ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இப்பின்னணியில், தேய்மானத்தின் அளவினையும் மிகையான தளம்பலினையும் வரையறைக்குட்படுத்துவதானது அத்தியாவசியமாகியுள்ளது. நாடு தற்போது கடந்து செல்கின்ற சென்மதி நிலுவை நெருக்கடியின் தீவிரத்தன்மையினைக் கருத்திற்கொண்டு செலாவணிவீதத் தேய்மானத்தின் அத்தகைய வரம்பற்ற வீதமானது தொடர்ந்தும் தீர்க்கப்படாதிருப்பின் ஒட்டுமொத்த பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் மீதும் கடுமையான பாதகமான தாக்கங்களேற்படுவதற்கு வழிவகுத்திருக்கலாம். மேலும், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் திறைசேரித் தலைவர்களுடனான கலந்துரையாடல்களின்போது செலாவணிவீத அசைவுகளில் ஏற்படும் தளம்பல் அளவு தொடர்பில் மத்திய வங்கியிடமிருந்து சந்தைக்கான சில வழிகாட்டல்களுக்கான தேவை வலியுறுத்தப்பட்ட வேளையில் வங்கிகளுக்கிடையிலான உடனடிச்சந்தை செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதற்கான தனிச்சிறப்புரிமை வர்த்தக வங்கிகளிடம் காணப்படுகின்றன.

சந்தைத் தொழிற்பாட்டாளர்களது ஆலோசனையுடன் மத்திய வங்கி முன்னைய நாளில் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட செலாவணி வீதத்தினை அடிப்படையாகக் கொண்டு தளம்பலின் அளவு தொடர்பிலான நாளாந்த வழிகாட்டலினை (அனுமதிக்கத்தக்க இருபக்க வேறுபாட்டு எல்லையொன்றுடன்) 2022 மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் சகல உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் வழங்கத் தொடங்கியது. இத்தகைய நடவடிக்கையானது ‘நிலையான செலாவணிவீத’ முறைமையென பிழையாகப் பொருட்கோடல் செய்யப்படுகின்ற போதிலும் தற்போதைய இடைநிலை ஏற்பாட்டிற்கும் நிலையான செலாவணிவீத முறைமைக்கும் இடையிலான தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன. நிலையான செலாவணிவீத முறைமையின் கீழ் மத்திய வங்கியொன்றினால் நிலையான நடுத்தர வீதமொன்று வழமையாக கட்டளையிடப்படும் வேளையில் தற்போதைய ஏற்பாட்டின்கீழ் மாறுகின்ற வீதத்தினால் உந்தப்பட்ட சந்தையானது நடுத்தர வீதமாகக் கருதப்படுகின்றது. இவ்வேற்பாட்டின் நடைமுறைப்படுத்தலானது முறையான சந்தை மற்றும் உத்தியோகபூர்வ சந்தை ஆகிய இரண்டிலும் இதுவரை செலாவணிவீத நிர்ணயத்தில் பாரியளவானதொரு உறுதிப்பாட்டினை ஏற்படுத்தியுள்ள வேளையில், இரு சந்தைகளிலும் நிலவிய மிகையான எல்லைகளையும் குறைத்ததுடன் அதன் தாக்கங்கள் வாடிக்கையாளர்களால் கொடுக்கல் வாங்கல்களிற்குப் பயன்படுத்தப்படும் செலாவணி வீதங்களிலும் பிரதிபலிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்வலர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பின்னூட்டல்களுக்கமைவாக சந்தைச் சக்திகள் மற்றும் பொருளாதார அடிப்படைகள் என்பவற்றினைக் காட்டிலும் ஊகத்தினால் பெருமளவு உந்தப்பட்ட செலாவணி வீதத்தின் மிகையான தளம்பலினைக் கொண்டிருந்த முன்னைய ஏற்பாட்டுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவான தளம்பல் மற்றும் அதிகளவிலான ஊகிப்புத்தன்மை என்பவற்றுடன் உந்தப்பட்ட சந்தையான செலாவணி வீதத்தின் தற்போதைய ஏற்பாடு தொடர்பில் பரந்தளவிலான இணக்கப்பாடு காணப்படுகின்றது.

அரசாங்கமும் மத்திய வங்கியும் வெளிநாட்டுத் துறையில் அவதானிக்கப்பட்ட சில சமமின்மைகளைத் திருத்துவதற்குத் தற்போதைய செலாவணிவீத ஏற்பாட்டுடன் இணைந்து பல்வேறு குறைநிரப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தியதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் உறுதிப்பாடொன்றினைக் கொண்டுவந்துள்ளன. திறந்த கணக்கு மற்றும் சரக்குக் கொடுப்பனவு நியதிகள் மீதான வரையறைகள் உத்தியோகபூர்வமற்ற சந்தையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளதன் ஊடாக அலுவல்சார் செலாவணி வீதம் மற்றும் உத்தியோகபூர்வமற்ற சந்தை வீதம் என்பவற்றிற்கிடையிலான இடைவெளியினைச் சுருக்கமடையச் செய்துள்ளன. இதற்கமைய, தற்போதைய செலாவணிவீத ஏற்பாடானது சுதந்திரமாகத் தொழிற்படக்கூடிய உத்தியோகபூர்வ சந்தை ஏற்பாட்டிற்கு மாறாக மிகவும் நம்பகமானதொரு பொறிமுறையெனப் பார்க்கப்படுகின்றது. இதன் விளைவாக, புதிய செலாவணிவீத ஏற்பாட்டின் அறிமுகத்திலிருந்து வங்கித்தொழில் முறைமைக்கான தொழிலாளர் பணவனுப்பல் கணக்கின் மீதான உட்பாய்ச்சல்கள் வேகமடைந்துள்ள வேளையில், மாற்றல்களும் மேம்பட்டுள்ளன. இலங்கைச் சுங்கத்திலிருந்தான தற்காலிக தரவுகளுக்கமைய 2022 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 2022 மே மாதத்தில் இறக்குமதிச் செலவினம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளது. இறக்குமதிச் செலவினங்களின் குறைப்பிற்கு மத்தியிலும் எதிர்வரும் காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமைக்கான பல்புடை மற்றும் இருபுடை மூலங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் உட்பாய்ச்சல்களுடன் அத்தியாவசியப் பண்டங்களின் கிடைப்பனவினை உறுதிசெய்வதற்கான சகல சாத்தியமான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். 2022 மாச்சில் செலாவணி வீதத்தின் துரிதமான தேய்வடைதலின் அளவினைக் கருத்திற்கொண்டு மற்றையவற்றிற்கிடையில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பணிகள் மீதான ஏற்றுமதிப் பெறுகைகள் என்பன தொடர்பில் வங்கித்தொழில் முறைமைக்கான அதிகரித்துவரும் உட்பாய்ச்சல்களுடன் இணைந்து உடனடியற்ற இறக்குமதிச் செலவினத்தின் மெதுவடைதலுடன் சந்தையினை அடிப்படையாகக் கொண்ட மேலுமொரு திருத்தம் எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மேம்பட்ட உத்வேகம் ஏனைய பல்புடை மற்றும் இருபுடை பங்காளர்களிடமிருந்தான குறுங்கால நிதியிடலுக்கான பேச்சுவார்த்தைகளுடன் இணைந்து நிதியிடல் ஏற்பாடு தொடர்பிலான பன்னாட்டு நாணய நிதியத்துடனான அலுவலர்; மட்ட உடன்படிக்கையினை எட்டுவதிலுள்ள முன்னேற்றம் என்பவற்றுடன் ஒருங்கிணைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. செலாவணி வீதத்தின் தற்போதைய ஏற்பாடு காலத்திற்குக் காலம் மீளாய்வுக்குட்படுத்தப்படுமெனவும் நாட்டிற்கான எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களினால் ஆதரவளிக்கப்பட்டு சந்தை நம்பிக்கை மீண்டவுடன் தேவையேற்படின் மேலும் நெகிழ்ச்சித்தன்மையொன்று அனுமதிக்கப்படுமென மத்திய வங்கி மீளவலியுறுத்த விரும்புகின்றது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.