இன்சூரன்ஸ் என்பது நமது குடும்பத்தில் உள்ள அன்புக்குரியவர்கள் நாம் இல்லாவிட்டாலும் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும்.
இந்த வழிமுறையை பலர் தவறாக புரிந்து கொண்டு இன்சூரன்ஸ் என்பதை ஒரு முதலீடாக நினைத்து கொண்டு பிரிமியம் பாலிசிகளில் பலர் முதலீடு செய்கின்றனர்.
பிரிமியம் இன்ஷூரன்ஸ் என்பது நாம் இருக்கும் போதே நமக்கு திரும்ப கிடைக்க கூடிய தொகையாகும். ஆனால் டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது முழுக்க முழுக்க நாம் இல்லாத போது நமது குடும்பத்தினருக்கு கிடைக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய தொகை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முதலீடு Vs இன்சூரன்ஸ்: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
இன்சூரன்ஸ்
சாதாரணமான பிரிமியம் இன்சூரன்ஸ் பாலிசியை பெரும்பாலும் தவிர்த்து விட்டு நமது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் இருக்கும் டேர்ம் இன்சூரன்ஸ்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே பல நிதி ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.
டேர்ம் இன்சூரன்ஸ்
டேர்ம் இன்சூரன்ஸ் என்பது யாரும் எடுக்க கூடிய வகையில் இல்லை என்பதுதான் இதன் சிறப்பு. ஒருவரின் வருமானத்தை வைத்தே அவருக்கு டேர்ம் இன்சூரன்ஸ் வழங்குவதா? வேண்டாமா? என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் முடிவு செய்யும்.
எனவே டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பவர்களுக்கு வருமான வரி தாக்கல் கணக்கு என்பது மிகவும் முக்கியம். ஒருவேளை வருமான வரி தாக்கல் கணக்கு இல்லாதவர்கள் வங்கி பரிவர்த்தனை அறிக்கையை சமர்ப்பித்து டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
பிரிவுகள்
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது விபத்தால் உண்டாகும் மரணம், நிரந்தர செயலிழப்பு, ஒருசில உடல் பாகங்கள் மட்டும் இழப்பு போன்ற வகைகளில் உள்ளது. இதில் எந்டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது விபத்தால் உண்டாகும் மரணம், நிரந்தர செயலிழப்பு, ஒருசில உடல் பாகங்கள் மட்டும் இழப்பு போன்ற வகைகளில் உள்ளது. இதில் எந்த வகையை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும்.த வகையை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டிய முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பாலிசி தொகை
டேர்ம் இன்ஷூரன்ஸை பொருத்தவரை பாலிசி தொகை சற்று அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் அதன் பயன் மிகப்பெரியதாக இருக்கும் என்பதும் உண்மை. ஏற்கனவே நாம் கூறியது போல் இன்சூரன்ஸை ஒரு முதலீடாக நினைக்காமல் இன்சூரன்ஸ் என்பது நமது குடும்பத்தின் எதிர்காலம் என்பதை முடிவு செய்து குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்த நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
60 வயது வரை
டேர்ம் இன்சூரன்ஸ் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எடுக்க முடியுமா? என்பது என்ற சந்தேகம் பலருக்கு எழும். டேர்ம் இன்சூரன்ஸ் 60 வயது வரை எடுக்கலாம் என்பதுதான் உண்மை. ஆனால் அதே நேரத்தில் 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இருந்தால் அதற்கேற்ப பிரீமியம் தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரோக்கியமான உடல்நலம் உள்ளவர்கள் 60 வயது வரை டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்தால் பெரிய அளவில் பிரிமியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி பாதுகாப்பு
டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கக்கூடிய மலிவு விலை இன்சூரன்ஸ் ஆகும். துரதிஷ்டவசமாக நமக்கு ஏதாவது நிகழ்ந்தால் நம் குடும்பத்திற்கு நிதி பாதுகாப்பு வழங்கும் ஒரு இன்சூரன்ஸ் என்பதால் இதை அனைவரும் கட்டாயம் எடுக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆன்லைன்
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பதற்கு முன் ஆன்லைனில் டேர்ம் இன்சூரன்ஸ் குறித்த பிரிவுகளை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் நமது வயது, நாம் எத்தனை வருடம் இன்சூரன்ஸ் எடுக்கப் போகிறோம் போன்றவற்றை டேர்ம் ப்ளான் கால்குலேட்டரை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். அதன் பின் எந்த இன்ஷூரன்ஸ் எடுத்தால் நமது நிதி நிலைமைக்கு சரியாக இருக்கும் என்பதை அறிந்து முடிவு செய்து கொள்ளலாம்.
What is Term Insurance? Why it necessary?
What is Term Insurance? Why it necessary? | டேர்ம் இன்சூரன்ஸ் என்றால் என்ன? ஏன் அவசியம் எடுக்க வேண்டும்?