சென்னை: கோயில் நிலத்தை விற்பனை செய்வதற்கான பத்திரத்தை பதிவு செய்யும்படி உத்தரவிட முடியாது என திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு சொத்து விற்பனை செய்யப்படும்போது கோயிலின் நலனே பிரதானமாக இருக்கவேண்டும். கோயிலின் பிரதான தெய்வத்திற்கு நீதி மறுக்கப்படும்போது நீதிமன்றம் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தும் என நீதிபதி தெரிவித்தார்.