சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளங்கோ என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கரூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது காக்காத்தோப்பு பகுதியில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டு வைக்கப்பட்டிருந்தது.
இதை கவனிக்காமல் வேகமாக வந்த இளங்கோ பேரிகார்டு மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் இளங்கோ ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் தலையில் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தலைக்கவசம் உயிர்க்கவசம்” என்பதை அனைவரும் உணர்ந்து, தலைக்கவசம் அணிந்து தலைக்கு வரும் ஆபத்தை தலைக்கவசத்தோடு தடுக்க வேண்டும்…