வீட்டில் சடலமாக கிடந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா! கொலையா? தற்கொலையா?

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா கரிமெல்லா ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரத்யுஷா கரிமெல்லா அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் தனது ஆடை வடிவமைப்பாளர் பணியைத் தொடங்கினார். அவர் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர் – நடிகைகளிடமும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
image
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (சனிக்கிழமை) பிரத்யுஷா சடலமாக மீட்கப்பட்டார். அவரது அறையில் கார்பன் மோனாக்சைடு பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அவர் சுவாசித்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
பிரத்யுஷா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.