அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள் என சீமான் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நாட்டின் இறையாண்மை குறித்து பேசிவிட்டு நாட்டை துண்டாடும் செயலை ஆர்.எஸ்..எஸ் பாஜக செய்து வருகிறது.
7000 கோடி ரூபாயை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன்? இலங்கையின் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா?. சீனாவின் ஒரு மாகாணமாக இலங்கையை மாற்றிவிட்டது.
இலங்கையில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் கூட சீன எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளபட்டு கொண்டிருக்கிறது
ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலை கேட்கும் அண்ணாமலை அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து கேட்கவில்லை? ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் பாஜக இருக்குமா?
அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள், திமுக பரம்பரை திருடர்கள்
தமிழகத்தின் ஒரே எதிர்கட்சிகாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது.
2024 ல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என கூறியுள்ளார்.