புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்ட பின் முற்றிலுமாக குணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் என்ற புற்றுநோய் மையம் நடத்திய பரிசோதனையில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து, மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு 6 மாதங்கள் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த அரியானாவின் குருகிராமை சேர்ந்த புற்று நோய் நிபுணரான ரங்கா ராவ், இந்த மருந்தின் நீண்ட காலப் பயன்களைப் பற்றி பொறுத்திருந்து தான் அறிய முடியும் என்றார்.