நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் யங் ஜீனியஸ் பிரக்ஞானந்தா சாம்பியன் ஆனார். நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் தொடர் முழுவதும் அபாரமாக ஆடிவந்த பிரக்ஞானந்தா இந்தியாவின் பிரணீத்தை எதிர்கொண்டார். கருப்பு நிறக் காய்களில் அசத்திய பிரக்ஞானந்தா 49ஆவது நகர்த்தலில் வெற்றிபெற்றார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த 9 சுற்றுகளில் 6 வெற்றி, 3 டிரா என்று தோல்வி காணாத பிரக்ஞானந்தா 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.2.59 லட்சம் பரிசு கிடைத்தது, பிரணீத்தால் 7ஆம் இடத்தைதான் பிடிக்க முடிந்தது.
இதனிடையே, நார்வே செஸ் தொடரில் வென்ற வீரர் பிரக்ஞானந்தாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது, சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா, தற்போது நார்வே செஸ் தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார். வெற்றிகளும், புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும், இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
சில மாத இடைவெளியில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரு முறை வீழ்த்தி, உலகை வியப்பில் ஆழ்த்திய நம் சென்னைச் சிறுவன் @rpragchess, தற்போது #NorwayChess தொடரில் வென்று மீண்டும் இந்தியாவுக்கே புகழ் சேர்த்துள்ளார்.
வெற்றிகளும் புகழ்மாலைகளும் மென்மேலும் குவியட்டும்! https://t.co/fGt7NJGeNq
— M.K.Stalin (@mkstalin) June 11, 2022
newstm.in