கோஹிமா :நாகாலாந்தில், கிளர்ச்சியாளர்கள் என கருதி சுரங்கத் தொழிலாளர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், 40 ராணுவ வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியைச் சேர்ந்த முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள மோன் மாவட்டம் ஓடிங் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் ௪ம் தேதிஅன்று பணி முடிந்து, தொழிலாளர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர், தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் என தவறுதலாக நினைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 13 பேர் உயிரிழந்தனர்.
ஆத்திரமடைந்த கிராம மக்கள், ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில், ஒரு ராணுவ வீரர் உயிர்இழந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசார், நீதிமன்றத்தில்
தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், ௩௦ ராணுவ வீரர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு நாகாலாந்து அரசு கடிதம் எழுதியுள்ளது.
Advertisement