நியூயார்க்-பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபெர்,28, முகத்தின் ஒரு பகுதியில் முடக்குவாதம் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
வட அமெரிக்க நாடான கனடாவை சேர்ந்த ஜஸ்டின் பீபெர், பிரபல பாப் இசைப்பாடகர். இவருக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில், கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை ஜஸ்டின் திடீரென ரத்து செய்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின், ஜஸ்டின் வெளியிட்ட ‘வீடியோ’ ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.ஜஸ்டின் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:சில நாட்களுக்கு முன் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதனால்தான் டொரான்டோ நகரில் நடக்கவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தேன். நான் ‘ராம்சே ஹன்ட்’ எனப்படும் முக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். நாளடைவில் கேட்கும் திறனையும் இழக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த நோயில் இருந்து குணமடைய முகத்திற்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. நான் இப்போது முழு சிகிச்சையில் இருக்கிறேன். சிகிச்சை முடிந்து 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
Advertisement