தேவையற்றவகையில் அரிசியை கொள்வனவு செய்ய வேண்டாம் – வர்த்தக அமைச்சர்

சில வகை அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுளள்தால், நெல் ஆலை உரிமையாளர்கள் உரிய அரிசி வகைகளை சந்தைக்கு விநியோகிப்பதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அரிசி வகைகளுக்கு நிர்ணய விலைகளை விதிக்கும் போது அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடுகளை உருவாக்கி நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அமைச்சர் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,இவ்வாறான சூழ்நிலையில் தேவையற்ற வகையில் அதிகளவு அரிசியை கொள்னவு செய்வதைதவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நுகர்வோர் பயனடையும்வகையில் சந்தைக்கு கூடுதலான அரிசியை விநியோகிக்க உரிய பகுதி நடவடிக்கை மேற்கொள்ள கோருவதாகவும் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர் அத்தியாவசிய பொருட்கள் நியாயமற்ற முறையில் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய பொருட்களின் விலைகள் மேலும் அதிகரித்தால் நுகர்வோர் பாதுகாப்பு அலுவல்கள அதிகார சபை தலையிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இவேளை பச்சரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக நேற்று (10) முதல் இந்த நிர்ண விலை அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதன்படி, ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சரிசி மற்றும் சிவப்பு பச்சரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகும்.

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அரிசியை விற்கவோ, வழங்கவோ அல்லது காட்சிப்படுத்தவோ கூடாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.