வாஷிங்டன்-அமெரிக்காவில் மூத்த குடிமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிக்கும், அனிருத்தா கல்கோட்டே என்ற இந்தியர் தன் நண்பர்களுடன் சேர்ந்து இணையம் வழியாக பல்வேறு சேவைகளை வழங்குவதாக கூறி, மூத்த குடிமக்களிடம் பண மோசடி செய்துள்ளார். கணினி பராமரிப்பு, பரிசுப் பொருட்களை அனுப்புவது உள்ளிட்ட சேவைகளுக்கு பணம் அனுப்பச் சொல்லி மூத்த குடிமக்களிடம் அனிருத்தா பணம் பறித்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த ஆசாத், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இருவர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகள் நிருபணமானால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 2 கோடி ரூபாய் அபராதம் கிடைக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.இதே மோசடி தொடர்பாக, ஹூஸ்டன் நகரில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வரும் இந்தியர்கள் சுமித் குமார், ஹிமன்ஷ் குமார், ஹசிப் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாஷிங்டன்-அமெரிக்காவில் மூத்த குடிமக்களை ஏமாற்றி பண மோசடி செய்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிக்கும், அனிருத்தா கல்கோட்டே என்ற இந்தியர் தன்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.