லா பாஸ்-அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட தாக கூறி, பொலிவியா நாட்டின் முன்னாள் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு, 1௦ ஆண்டு சிறை தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், ௨௦௧௯ நவம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் எவோ மாரல்ஸ் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பார்லிமென்டில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ், தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார். ஆனால் பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். பின், நீதிமன்ற உத்தரவுப்படி, ௨௦௨௦ செப்டம்பர் ௬ல் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் எவோ மாரல்ஸ் கட்சியின் வேட்பாளர் லுாயிஸ் ஆர்க் வெற்றி பெற்று அதிபரானார்.
இந்நிலையில், எவோ மாரல்ஸ் ஆட்சியை, ராணுவத்துடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி கவிழ்த்ததாக கூறி, முன்னாள் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ், இந்த ஆண்டு துவக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அனெஸ் மீதான ஆட்சி கவிழ்ப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘நாட்டின் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி, அவருக்கு ௧௦ ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அனெஸ் மேல் முறையீடு செய்வார் என, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
Advertisement